மியூச்சுவல் ஃபண்ட் வகை : இ.எல்.எஸ்.எஸ்...!

மியூச்சுவல் ஃபண்ட் வகை : இ.எல்.எஸ்.எஸ்...!

இந்தத் திட்டம், வருமான வரி கட்டுற நிலையில இருக்குற மாதச் சம்பளக்காரர்கள் மத்தியில ரொம்ப பிரபலம்! இ.எல்.எஸ்.எஸ். (Equity Linked Savings Scheme) அப்படின்னு சுருக்கமா சொல்லப்படுற இதுவும், அடிப்படையில ஒரு ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுதான். இதுல முதலீடு செஞ்சா வரிச்சலுகை உண்டு. 80-சி பிரிவின் கீழ ஒரு நிதி ஆண்டுல, ரூ.1.5 லட்சம் வரைக்கும் முதலீடு செஞ்சு வருமான வரி கட்டுறதிலிருந்து தப்பிக்கலாம்.

நியாயமான கேள்வி.

இந்த வகை திட்டங்கள்ல, அதுமட்டுமில்ல, இப்படி வரிச்சலுகை கொடுக்கிறதுக்கு இன்னொரு நோக்கமும் இருக்கு... பங்குச் சந்தை முதலீட்டை அதிகரிக்கிறது மூலமா, நிறுவனங்களோட செயல்பாட்டை மேம்படுத்தி, நாட்டோட பொருளாதார வளர்ச்சியை உயர்த்தலாம்ங்கிறதுதான்.

இந்த இடத்துல, 'மூணு வருஷத்துக்குப் போட்ட பணத்தை எடுக்கமுடியாதுன்னு சொன்னா, இது குளோஸ்ட் எண்டட் ஃபண்டா..?'னு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். நிறையப்பேர் அப்படித்தான் நினைச்சுக்குறாங்க. ஆனா அப்படிக் கிடையாது. குளோஸ்ட் எண்டட் ஃபண்டுகள்ல புதிய வெளியீட்டின்போது மட்டும்தான் முதலீடு செய்யமுடியும். இந்த இ.எல்.எஸ்.எஸ். திட்டத்துல எப்போ வேணும்னாலும் முதலீடு செய்யலாம்.  மூணு வருஷத்-துக்கு முன்னாடி பணத்தை எடுக்க-முடியாது.

இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள்ல முதலீடு செய்யும்போதே, அவங்கவங்க வருமான வரி விதிப்புக்கு ஏத்தபடி 10-30% வரி சேமிக்கப்படுது. அதாவது, முதலீடு செய்யும்போதே 10 முதல் -30% வருமானம் கிடைச்சிடுது. அதுக்குப்பிறகு கிடைக்கிறது எல்லாம் கூடுதல் வருமானம்தானே? அதுவும்போக, இந்தத் திட்டத்துல வழங்கப்படற டிவிடெண்டுக்கு வரி எதுவும் கிடையாது. முதிர்வுக்கு அப்புறம் கிடைக்கிற லாபத்துக்கும் கூட எந்த வரியும் கிடையாது.

மற்ற திட்டங்கள்ல இல்லாத இன்னொரு சிறப்பு, புதிய வெளியீடா இருந்தாலும், ஏற்கெனவே மார்க்கெட்டுல இருக்குற திட்டமா இருந்தாலும் 500 ரூபாய் இருந்தா போதும்... இ.எல்.எஸ்.எஸ். திட்டத்துல முதலீட்டை ஆரம்பிச்சுடலாம். அதையும் மாதாமாதம் குறிப்பிட்ட தொகை போடுற மாதிரி, எஸ்.ஐ.பி. முறையிலேயே போடலாம்!

கவனம்! கடந்த மூணு வருஷ காலத்துல, பங்குச் சந்தையோட ஏற்ற - இறக்கத்தையெல்லாம் மீறி, இந்த வகை ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்துக்கிட்டிருக்கு. அதனால இது புதிய முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமானதா இருக்கும்.

யாருக்கு ஏற்றது?:

மாதச் சம்பளக்காரர்கள், வரியைச் சேமிக்க நினைப்பவர்களுக்கு.