ஜிஎஸ்டி-ன் கீழ் நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பிக்க எளிய வழிகள்..!

ஜிஎஸ்டி-ன் கீழ் நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பிக்க எளிய வழிகள்..!

Strategies which companies may use to avoid paying taxes the gst india





சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள் முடிந்துள்ளன. ஆனால் புதிது புதிதாக நிறுவனங்கள் வரியைக் குறைக்கப் பல வழிமுறைகளைக் கையாண்டு கொண்டு தான் இருக்கின்றன. எனவே ஜிஎஸ்டி-ன் கீழ் வரியைக் குறைக்க மற்றும் தவிர்க்க நிறுவனங்கள் கையாளும் உத்திகள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.

1.சிறியதாகச் செயல்படவும் வருமான வரித் துறை வல்லுநர்கள் நிறுவனத்தின் அளவு 50 கோடிகளுக்கு இருக்கின்றது என்றால் டிராக் செய்ய மிகவும் சிரமம் என்று கூறுகின்றனர். எனவே சிறியதாகச் செயல்பட்டு வருவாயினைத் தனிநபர் கணக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

2.சிறிய வரி நிறுவனங்களுடன் இணைப்பு பெரிய கணக்கியல் நிறுவனங்கள் அவர்களுடன் பணியை அளிக்கும் வாடிக்கையாளர்களின் நற்பெயரினை பார்க்கின்றன. எனவே, இந்த நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை நிர்வகிக்கச் சிறிய பட்டய கணக்காளர்களை வைத்து இருப்பார்கள்.

3.ரொக்கப் பணப் பரிவர்த்தனை பணப் பரிவர்த்தனை மூலம் வணிகம் செய்யும் போது பரிவர்த்தனையை டிராக் செய்ய ஆதாரங்கள் கிடைக்காமல் மறைக்கலாம், இதனால் வரியினைக் குறைக்க முடியும். இன்னும் ஜிஎஸ்டி முறைக்கு நிறுவனம் மாறாமல் இருக்கின்றது என்றால் அது வரை பணப் பரிவர்த்தனை செய்து வரியினைக் குறைக்கலாம்.

4.பில் மற்றும் பில் போடமல் நடக்கும் வணிகம் மருந்துக் கடைகள் போன்ற பல சிறிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பில் அளிக்காமல் பொருட்களை வழங்கி விட்டுப் பணப் பரிவத்தனை செய்துவிடுகின்றனர். பில் வேண்டும் என்று கேட்கும் போது மட்டுமே இவர்கள் ரசீதுகளை அளிக்கின்றனர். இதனால் வருவாயினை எளிதாக மறைக்க முடியும்

5.முன் தேதியிட்ட பரிவர்த்தனைகள் வரி செலுத்தாமல் தவிர்க்க முக்கியமான வழி என்றால் அது முன் தேதியிட்ட பரிவர்த்தனைகள் முறையாகும். நடப்புத் தேதியில் வாங்கும் ஒரு பொருளுக்கு முந்தைய மாத தேதியில் ரசீது அளிப்பதன் மூலம் வரியைத் தவிர்க்கலாம். பணத்தை வங்கியில் டெப்பாசிட் செய்யாதது வரை இப்படிச் செய்து வரி ஏய்ப்புச் செய்ய முடியும்.

6.பொருட்களின் வகையினை மாற்றுதல் தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் வகையினை மாற்றி அமைப்பதன் மூலமாக வரியினைக் குறைக்க முடியும். 80,000 பொருட்கள் மீதான வரி விகிதம் ஜிஎஸ்டி-ன் கீழ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, அது அவை பயன்படுத்தும் தயார்ப்புப் பொருட்களைப் பொறுத்தது ஆகும். சாக்லேட்டினை இனிப்பு, கொக்கோ நிரப்பப்பட்ட மிட்டாய், சாக்லேட், பிஸ்கட் அல்லது செதில்-பூசப்பட்ட பிஸ்கட் வகையாக மாற்றி அமைக்கலாம்.

7.வரி விலக்கு வரம்பு 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு உண்டு. எனவே பெரிய நிறுவனங்களைச் சிறு நிறுவனங்களாகப் பிரித்துச் செயல்படலாம். இதனால் வரி விலக்கும் பெற முடியும்.

8.வரி விலக்குப் பொருட்கள் வணிகத்தைச் செய்தல் பூஜை பொருட்கள், காதி, விவசாய உபகரணங்கள், மண் பாத்திரங்கள் மற்றும் உள்ளூர் கைவினை போன்ற பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. குறிப்பாகத் தென் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பூஜைக்குத் தேவையான பொருட்களினை மதம் சார்ந்த தயாரிப்புகள் வகையாகப் பதிவு செய்தார்கள் என்றால் அவற்றுக்கு வரி விலக்கு பெற முடியும்.

9.பதிவு இருப்பிடத்தை மாற்றுக வட கிழக்கு மாநிலங்களுக்கு வரி விலக்கு அதிகம் உண்டு. எனவே நிறுவனத்தினை அங்குப் பதிவு செய்து வணிகச் செய்வதன் மூலம் வரிகளைக் குறைக்க முடியும்.

10.இன்டர்-ஸ்டேட் இயக்கம் நிறுவனங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோறு மாநிலத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்ல இந்த உத்தியைக் கையாளுகின்றன. ஒரு மாநிலத்தில் விற்பனையாளர், நல்ல கோரிக்கைகளுடன் உள்ளீட்டுக் கடனைப் பெறுகையில், பிற மாநிலங்களில் விற்பனை செய்யும் பொது அதனை மறைத்து விற்க முடியும்.