உங்கள் பான் கார்டு ஆக்டிவாக( Is your PAN Card Active) உள்ளதா என்பதை எப்படி செக் செய்வது

உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா ? செக் செய்வது எப்படி..?

உங்கள் பான் கார்டு ஆக்டிவாக( Is your PAN Card Active) உள்ளதா என்பதை எப்படி செக் செய்வது


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


ஜூலை 27ஆம் வரையில் மத்திய அரசு கண்டறிந்த சுமார் 11 லட்ச போலி பான் கார்டுகளை அதிரடியாக முடங்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் சரியான தகவல் அளிக்காமல் இருக்கும் பான் கார்டுகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.
இதன் மூலம் உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். டீஆக்டிவேட் செய்யப்பட்டு இருந்தால் உங்கள் பான் கார்டு எண்ணை மீட்டு எடுக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் உங்கள் பான் எண் ஆக்டிவாக உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதை இங்கே பார்க்கலாம்.

படி 1:
முதலில் வருமான வரித்துறையின் இணையத்திற்கு செல்லுங்கள்
www.incometaxindiaefiling.gov.in

படி 2
முதல் பக்கத்திலேயே சர்வீஸ் என்ற டேப் இருக்கும், அதை கிளிக் செய்து 'நோ யுவர் பான்' என்பதை கிளிக் செய்யவும்

படி 3:
'நோ யுவர் பான்' என்பதை கிளிக் செய்யப்பட்ட பின்பு, புதிய இணையபக்கத்திற்கு செல்லும், இப்பக்கத்தில் பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகிய தகவல்களை கேட்டும். அனைத்திற்கும் சரியான தகவல்களை பதிவிட்டு சப்மிட் என பட்டனை தட்டுங்கள்

படி 4:
இப்போது நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும் , அதனை கொடுக்கப்பட்ட இடத்தில் கொடுத்து வேலிடேட் செய்ய வேண்டும்
.
படி 5:


உங்கள் பான் கார்டு ஆக்டிவாக இருந்தால் தகவல்களின் கடைசியில் ஆக்டீவ் என்று இருக்கும்.