வாடகை ஒப்பந்தம்(Rent Agreement) என்றால் என்ன.

வாடகை ஒப்பந்தம்(Rent Agreement) என்றால் என்ன.



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வாடகை ஒப்பந்தத்தில் எத்தனை வகை உள்ளது..?

உங்களுக்குச் சொந்த வீடு இல்லையென்றால் வாடகை ஒப்பந்தத்தைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். ஒரு குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளருக்கும் வாடகைக்குக் குடியிருப்பவருக்கும் இடையே கையெழுத்திடப்படும் ஒரு ஒப்பந்தமாகும்.
வாடகை ஒப்பந்தம் என்பது நில உரிமையாளர் வாடகை இருப்பவருக்கு அவருடைய குடியிருப்புச் சுற்றுப்புறங்களில் வசிக்க அனுமதி அளிக்கிறார்.
வாடகை ஒப்பந்தத்தில் மூன்று வகை இருக்கின்றன. அவை பின்வருமாறு:

11 – மாத குத்தகை ஒப்பந்தம்
இது ஒரு குறுகிய கால ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் 11 மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும். நில உரிமையாளரும் வாடகைக்காரரும் இருவருமே இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், அவர்கள் அதைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வகை வாடகை ஒப்பந்தத்தில் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லாததால் இது அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.


நீண்ட காலத்திற்கான குத்தகை ஒப்பந்தம்
 பெயருக்கேற்றாற் போல இந்த நீண்ட காலக் குத்தகை ஒப்பந்தம் என்பது பொதுவாக நீண்ட காலத்திற்கானதாகும். அது ஒரு வருடமாக இருக்கலாம், ஐந்து வருடங்களாக இருக்கலாம், பத்து வருடங்களாக இருக்கலாம் அல்லது அதற்கு மேற்பட்டும் இருக்கலாம். பொதுவாக நீண்ட கால வாடகை ஒப்பந்தங்கள் குடியிருக்கும் தேவைகளுக்காக அமைக்கப்படுகின்றன.


வணிக ரீதியான குத்தகை ஒப்பந்தம்
 உரிமையாளர் ஒரு சொத்தை வாடகைக்காரருக்கு வியாபார நோக்கங்களுக்காக வாடகைக்கு விட்டால் அவர்கள் வணிக ரீதியான ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது அவசியமாகும். நில உரிமையாளருக்கும் வாடகைக்காரருக்கும் இடையே ஒரு வணிக ரீதியான ஒப்பந்தம் நிறுவப்படுகிறது. ஒரு வாடகை ஒப்பந்தத்தை வியாபாரத்தின் தேவைகளைப் பொறுத்துத் தனிப்பட்ட முறையில் வடிவமைத்துக் கொள்ளலாம்.


நிறைவு
 ஒரு நல்ல வாடகை ஒப்பந்தம் என்பது வாடகைக்காரர் மற்றும் நில உரிமையாளர் இருவரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக இருக்கும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக, நீங்கள் ஒப்பந்தத்தைக் கவனமாகப் படித்து அதிலுள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் புரிந்து கொண்டு அவற்றிற்குச் சம்மதிக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.