வரி கணக்கு தாக்கல் : பான் கார்ட், ஆதார் கார்ட் பெயர் வேறு வேறாக இருந்தால் என்ன தீர்வு?

வரி கணக்கு தாக்கல் : பான் கார்ட், ஆதார் கார்ட் பெயர் வேறு வேறாக இருந்தால் என்ன தீர்வு?




வரி கணக்கு தாக்கல் : பான் கார்ட்,  ஆதார் கார்ட் பெயர் வேறு வேறாக இருந்தால் என்ன தீர்வு?

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா திருத்தத்தின்படி, வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.  மேலும், வருமான வரி நிரந்தர கணக்கு பான் உடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க முயலும்போது,  அதிகம் பேருக்கு சிக்கல் ஏற்பட்டது.

காரணம், பான் எண் தொடர்பான ஆவணங்களில், எல்லோரது பெயரிலும் தந்தை பெயரும் சேர்க்கப்பட்டு இருக்கும். ஆனால், ஆதார் எண் ஆவணங்களில், தந்தை பெயரின்  முதல் எழுத்து (இன்ஷியல்) மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த முரண்பாடுகளால், இணைக்க முடியவில்லை.

இதற்கு வருமான வரித்துறை தீர்வு  அறிவித்து உள்ளது.
ஆதார் இணையதளத்தில் சென்று (
https://uidai.gov.in/
), பெயர் மாற்றத்துக்கான கோரிக்கை விடுத்து, அதற்கு ஆதாரமாக பான் கார்டின் ஸ்கேன் காப்பியை  அப்லோட் செய்ய வேண்டும். இதன்மூலம், ஒரே மாதிரியான பெயர் கிடைப்பதால், அதை பான் எண்ணுடன் இணைக்க முடியும் என்று வருமான வரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில பெண்கள் திருமணத்துக்கு பிறகு கணவர் பெயரை சேர்த்திருப்பார்கள். அவர்களுக்காக, அவர்கள் ஆதார் எண்ணுக்கு பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டை(ஓ.டி.பி.) வருமான வரித்துறை அனுப்பும். அப்போது, பான், ஆதார் என இரு ஆவணங்களிலும் அவர்களின் பிறந்த ஆண்டு ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று வருமான வரித்துறை சரி பார்க்கும். அந்த ஓ.டி.பி -ஐ பயன்படுத்தி, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண் செல்லாது என்கிற நிலை உருவாகி இருக்கிறது. மாதத் சம்பளக்காரர்கள் ஜூலை 31 ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தக்கல் செய்ய வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். (
https://incometaxindiaefiling.gov.in
/) இதனை ஜூலை 1 ம் தேதிக்குள் மேற்கொள்ள சொல்லப்பட்டுள்ளது. இது வரைக்கும் ஏப்ரல் 10, 2016 வரைக்கும் 1,08,30,265 பேர்  பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்கிறார்கள்.