பிபிஎப் (PPF) எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை எங்கெல்லாம் துவங்கலாம்?

பிபிஎப் (PPF) எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை எங்கெல்லாம் துவங்கலாம்?




பிபிஎப் அல்லது பொது வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்க பின்னணி கொண்ட நீண்ட காலத்திற்கான சிறு சேமிப்புத் திட்டமாகும். இது இந்திய குடிமக்களுக்கிடையே பிரசித்திப் பெற்ற பாதுகாப்பு மற்றும் பத்திரமான முதலீட்டு வடிவமாகும்.

பிபிஎப் உங்கள் பணத்திற்கு பாதுகாப்பையும், மற்ற திட்டங்களோடு ஒப்பிடும் போது ஒரு நல்ல வருவாய் விகிதத்தையும், வரிப் பயன்களையும் வழங்குகிறது. இது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமும் கூட. மேலும் இது அரசாங்க பின்னணியைக் கொண்டதால் பிபிஎப் தனியார்த் துறையில் பணிபுரியும் மற்றும் வேலையில்லாப் பிரிவினர் மற்றும் அரசாங்கத்தின் நிரந்த வைப்புத் தொகை மற்றும் ஊதியம் போன்ற வசதிகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கு சேமிப்பதற்கான சிறந்த கருவியாகும்.

சரி ஒரு பிபிஎப் கணக்கை எங்கே தொடங்கலாம்?

1. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

பிபிஎப் கணக்கை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைகள் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் தொடங்கலாம். எஸ்பிஐ யில் பிபிஎப் கணக்கைத் தொடங்க நீங்கள் பிபிஎப் படிவத்தை நிரப்பி மேலும் வங்கியால் கேட்கப்படும் சில இதர ஆவணங்களுடன் சேர்த்து சமர்பிக்க வேண்டியது அவசியமாகும்.
உங்கள் பிபிஎப் பணப் பரிவர்த்தனைகளை பற்றிய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய வங்கியால் வழங்கப்பட்ட ஒரு பிபிஎப் கணக்கு புத்தகத்தை நீங்கள் பெறுவீர்கள்.

2. நியமிக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகள்.

பிபிஎப் கணக்கை ஏதேனும் ஒரு வங்கி கிளையில் தொடங்கி விட முடியாது. சில குறிப்பிட்ட வங்கி கிளைகளில் மட்டுமே பிபிஎப் கணக்கை உங்களால் தொடங்க முடியும். இந்த வசதியை வழங்கும் நியமிக்கப்பட்ட வங்கிக் கிளைகளின் பட்டியலை நீங்கள் வங்கியின் இணைய தளத்தில் அல்லது உங்கள் வங்கியின் கிளையில் கண்டறியலாம்.

3. அஞ்சல் அலுவலகங்கள்

அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நீங்கள் பிபிஎப் கணக்கைத் தொடங்கலாம். உங்கள் வட்டாரத்தில் உள்ள ஏதேனும் ஒரு அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று சம்மந்தப்பட்ட அலுவலரைச் சந்தித்து கணக்கைத் தொடங்குவதற்கு தேவையான படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த படிவம் இணையத்திலும் கூட கிடைக்கப் பெறுகிறது.
இந்த பிபிஎப் கணக்கை அஞ்சல் அலுவலகத்தில் தொடங்குவதற்கு உங்கள் சமீபத்திய இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், முகவரிச் சான்று, அடையாளச் சான்று, பான் கார்ட் மற்றும் வைப்புத் தொகை ஆகியவைத் தேவையாகும்.

பிபிஎப் கணக்கு..

இக்கணக்கை எங்கெல்லாம் துவங்கலாம் என பார்த்த நிலையில், இதை யாரெல்லாம் துவங்கலாம், இக்கணக்கை துவங்க என்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.